பரிந்துரைக்கப்பட்ட நேரம்: 40 நிமிடங்கள்
பாடத்தின் நோக்கம்
- சங் நீலா உத்தமன் தனது கிரீடத்தை எப்படி இழந்தான் என்ற கதையைப் பாருங்கள், கேளுங்கள்
- வில்லு பாட்டிலுள்ள பல்வேறு அம்சங்களை நன்கு அறிந்து கொள்ளுங்கள்
யாருக்குத்தான் கதைக் கேட்க பிடிக்காது?
வில்லு பாட்டு ஒரு பண்டைய இந்திய பாரம்பரிய கலை. இசையுடன் நடனமும் வர்ணனையும் கலந்த இந்த கலை பொதுவாக கோயில்கள், கிராம சதுரங்கள் போன்ற இடங்களில் நிகழ்த்தப்படுகிறது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. உடுக்கை, குடம், தாளம், கட்டை போன்ற துணை இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படுகிறது.
AK நாடகக்குழுவின் ராணி-கலா கதை நேரத்தின் ஒரு பகுதியைக் கண்டு கீழ்காணும் பயிற்சிகளை பதிவிறக்கம் செய்து மாணவர்களுடன் கலந்து உரையாடுங்கள்.